
ஏப்ரல் 22, லக்னோ (Sports News in Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தின் முடிவில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று நடப்பு தொடரின் 40 வது ஆட்டம் நடைபெறுகிறது. லக்னோவில் உள்ள ஏக்நா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இன்று இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. MS Dhoni: 2026 ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் மாற்றம்? - மனம் திறந்த எம்.எஸ் தோனி.!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் டெல்லி கேபிட்டல்ஸ் (Super Giants Vs Capitals):
ஐபிஎல் 2025 போட்டித்தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி 2 போட்டியில் தடுமாறியதால் இரண்டாவது இடத்துக்கு வந்தது. அதேநேரத்தில், வெற்றி-தோல்வி என சமாளித்து வந்த லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது. ஆகையால், இன்றைய ஆட்டத்தின் வெற்றி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால், போட்டியில் வெற்றிபெற இரண்டு அணிகளும் முனைப்புடன் செயல்படவுள்ளன.