KKR Vs RCB: ஓப்பனிங்கே மரணமாஸ்.. சுனில் & அஜிங்கிய ரஹானே வெறியாட்டம்.. பெங்களூர் அணிக்கு 175 ரன்கள் இலக்கு.!
ரஹானே மற்றும் சுனில் ஆகியோரின் ஆட்டம், கொல்கத்தா அணியின் அதிரடி ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி முதல் பாதியில் 174 ரன்கள் குவித்து இருக்கிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
மார்ச் 22, கொல்கத்தா (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், முதல் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகின்றன. கேகேஆர் - ஆர்சிபி (KKR Vs RCB) அணிகள் மோதும் ஆட்டம், இன்று மாலை 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். Ajinkya Rahane: ருத்ரதாண்டவம்.. அடித்து நொறுக்கிய அஜிந்திய ரஹானே.. மைதானத்தில் சிக்ஸ், பவுண்டரி மழை..!
கொல்கத்தா அணி 174 ரன்கள் குவிப்பு:
டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பௌலிங் தேர்வு செய்தார். இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. முதல் 3 ஓவர்கள் ஆட்டம் பெங்களூர் கையில் இருந்தாலும், பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, சுனில் ஆகியோரின் அதிரடி ஆட்டம், ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்தது. கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடியவர்களில் குயின்டன் காக் 5 பந்துகளில் 4 ரன்கள், சுனில் நரின் 26 பந்துகளில் 44 ரன்கள், அஜிங்கிய ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 6 ரன்கள் அடித்தனர். ரிங்கு சிங் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அக்ரிஸ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்தது. இதனால் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் குர்னால் பாண்டியா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜோஸ் 2 விக்கெட், ரஷீத், சுயாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
ஐபிஎல் 2025 போட்டியில் முதல் அரைசதம்:
சுயாஸ் விக்கெட் எடுத்த காட்சிகள்: