
மார்ச் 22, கொல்கத்தா (Sports News): டாடா ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியில், இன்று முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) அணிகள் இடையே, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கேகேஆர் - ஆர்சிபி (KKR Vs RCB) அணிகள் மோதும் ஆட்டம், இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். Quinton de Kock: ஐபிஎல் 2025-ன் முதல் விக்கெட்.. யார் அந்த துரதஷ்டசாலி? பவுண்டரி அடித்த கையுடன் வெளியேற்றம்.!
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரஹானே:
இந்நிலையில், இன்று கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடிய அஜிங்கிய ரஹானே, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னை அணியில் இருக்கும்போது அதிரடியாக விளையாடியவர், மீண்டும் தான் பார்மில் இருப்பதை உறுதிப்படுத்த, அதிரடியாக செயல்பட விதம் ரசிகர்களை கவர்ந்தது. மைதானத்தில் சிக்ஸ், போர் என வந்த பணத்தையெல்லாம் பறக்கவிட்டு மாஸ் காண்பித்து இருந்தார். 31 வது அரைசதம் ரஹானே இன்று அடித்தார். 25 பந்துகளில் 51 ரன்கள் அடித்து இருந்தார். 50 ரன்களில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் விளாசி இருந்தார். 31 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரஹானே, குர்னால் பாண்டியா பந்துவீச்சில், ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து, 10.3 வது ஓவரில் விக்கெட் இழந்து வெளியேறினார்.
சிக்ஸ், பவுண்டரி என அடித்து விளாசிய அஜிங்க்ய ரஹானே:
Rahane making a statement! 💜🔥
Ajinkya Rahane welcomes himself with stunning strokes & towering sixes! 💥✨#KKRvRCB #IPL2025 #AjinkyaRahane #Sportskeeda pic.twitter.com/9HreKiof0f
— Sportskeeda (@Sportskeeda) March 22, 2025
ரஹானேவின் அதிரடி ஆட்டம்:
MAXIMUM! 🔥#AjinkyaRahane picks the length early and whacks #RasikhSalam for the first six of #TATAIPL 2025! 🙌🏻
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar 👉 #KKRvRCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/JhVhuON09F
— Star Sports (@StarSportsIndia) March 22, 2025