CSK Vs KKR: சொந்த மண்ணில் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்குமா சென்னை? இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக பலப்பரீட்சை.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், சூப்பர் கிங்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
ஏப்ரல் 11, சேப்பாக்கம் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி - டிசி அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Chennai Super Kings Vs Kolkata Knight Riders IPL 2025) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. RCB Vs DC: ஐபிஎல் 2025: பெங்களூர் Vs டெல்லி அணிகள் இன்று மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
சூப்பர் கிங்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் (Super Kings Vs Knight Riders):
இன்று நடைபெறும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தொடர் தோல்வியுடன் நடப்பு சீஸனின் புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் சென்னை அணி தோல்வியில் இருந்து மீளுமா? கொல்கத்தா அணி தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.