ஏப்ரல் 10, பெங்களூர் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று குஜராத் Vs ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் குஜராத் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 10, 2025) பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் (Royal Challengers Bengaluru Vs Delhi Capitals IPL 2025) மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகிய தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். Priyansh Arya: 42 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பிரியன்ஷ் ஆர்யா.. பஞ்சாப் மாஸ் சம்பவம்.!
ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் கேபிட்டல்ஸ் (Royal Challengers Vs Capitals):
இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் இரண்டு சமமான வெற்றிக்கு பலபரீட்சை செய்யவுள்ளது. இதுவரை 3 போட்டியில் மோதி தொடர் வெற்றியை தக்கவைத்துள்ள டெல்லி அணியும், 4 போட்டியில் மோதி 1 போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ள பெங்களூர் அணியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு எப்படியேனும் கப் வாங்க வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் சொந்த மண்ணில் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்குகிறது.