CSK Vs SRH IPL 2025: சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ்.. தொடர் தோல்வியில் இருந்து மீளப்போராடும் அணிகள்.. இன்று பலபரீட்சை.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League) போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Chennai Super Kings Vs Sunrisers Hyderabad) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
ஏப்ரல் 25, சென்னை (Sports News in Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் (Royal Challengers Bangalore Vs Rajasthan Royals) அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து, ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் (IPL 2025 Points Table) 3வது இடத்தில் இருக்கிறது. LSG Vs DC: வெற்றியை தக்கவைக்க போராடும் டெல்லி.. ஜொலிக்குமா லக்னோ? இன்று மோதல்.!
சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் (Super Kings Vs Sun Risers IPL 2025):
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (CSK Vs SRH IPL 2025) அணி இடையே போட்டி நடைபெறுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.
இதுவரை இரண்டு அணிகளும் தாங்கள் எதிர்கொண்ட 8 போட்டிகளில் 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்று இறுதியாக 9 மற்றும் 10 வது இடத்தினை தக்கவைத்துள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று முன்னேற்றப்பாதைக்கு செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.