SRH Vs DC: பந்துவீச்சில் புயலாக ஹைதராபாத்.. இறுதிக்கட்டத்தில் அணிக்கு கைகொடுத்த திரிஷ்டன், அஷுதோஷ்.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 133 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனால் 134 ரன்களே வெற்றிக்கு தேவை என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.
மே 05, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று ஹைத்ராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி ஹைத்ராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் முதலில் தடுமாறியது. கிட்டத்தட்ட 13 வது ஓவரிலேயே 6 விக்கெட் இழந்த டெல்லி அணி 70 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நின்று ஆடி அணியின் ரன்களை உயர்த்தினர். 'மூக்கு மேல ராஜா' - ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடி பரிசு..!
ஹைதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்கு:
இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் ஆட்டக்காரர்கள் கருண் நாயர், பாப் டுப்ளசிஸ், அபிஷேக் போரல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அணியின் முக்கிய வீரர் கே.எல் ராகுல் 14 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். கேப்டன் அக்சர் படேல் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். 13 ஓவர் வரை திணறிய அணிக்கு கைகொடுக்க திரிஷ்டன் களமிறங்கி 36 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். விப்ராஜ் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அசுதோஷ் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முடிவில் 20 ஓவர்களில் டெல்லி அணி 133 ரன்களை சேகரித்தது. இதனால் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.
பீல்டிங்கில் மரண காட்டு காட்டிய டெல்லி: