Abhishek Sharma: அபிஷேக்கின் 50 கனவுக்கு ஆப்பு வைத்த ஹர்திக்.. ஹைதராபாத்தின் விக்கெட் காலி.!
50 ரன்கள் எடுக்கலாம் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்த அபிஷேக் ஷர்மாவின் பயணத்துக்கு ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏப்ரல் 17, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Mumbai Indians Vs Sunrisers Hyderabad) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. போட்டியின் முதல் பகுதியில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. MI Vs SRH: ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. முன்னேறுமா? அடிசறுக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!
அபிஷேக் விக்கெட் காலி:
இந்நிலையில், 50 என்ற இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த அபிஷேக் ஷர்மாவின் விளையாட்டுக்கு ஹர்திக் பாண்டியா தனது பந்துகளில் முற்றுப்புள்ளி வைத்தார். 28 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 40 ரன்கள் அடித்தவர், 7.3 வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். முதல் விக்கெட்டை இழந்த எஸ்ஆர்எச் அணி 59 ரன்கள் எடுத்தது.