MI Vs SRH | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 17, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. தொடர் வெற்றியுடன் ஐபிஎல் 2025 தொடரில் ஜாம்பவானாக இருந்த டெல்லி அணிக்கு முந்தைய போட்டி இழப்பை தந்தது. நேற்றைய போட்டியும் கைநழுவிச் செல்லும் சூழல் உண்டாகியது. இறுதியில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி ராஜஸ்தானை வீழ்த்தியது. MS Dhoni With Robot Dog: ரோபோ நாயுடன் சேட்டை செய்த தோனி.. வீடியோ வைரல்..!

மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் (Indians Vs Sunrisers):

அதனைத்தொடர்ந்து, இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Mumbai Indians Vs Sunrisers Hyderabad) அணிகள் இடையே நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கவுள்ள இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 7 மற்றும் 9 வது இடத்தை தக்க வைத்துள்ளன. இதனால் புள்ளிப்பட்டியலில் முன்னேற இரண்டு அணிகளும் தங்களுக்கு இடையே பலபரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சி, ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலியில் நேரலையில் பார்க்கலாம்.