WI Vs PAK 3rd ODI: கேப்டன் ஷாய் ஹோப் அபார சதம்.. பாகிஸ்தான் வெற்றி பெற 295 ரன்கள் இலக்கு..!
வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ரன்கள் அடித்துள்ளது.
ஆகஸ்ட் 12, டிரினிடாட் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டின் டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. AUS Vs SA 2nd T20I: ஆஸ்திரேலியா 165 ரன்னுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!
வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (West Indies Vs Pakistan):
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் (WI Vs PAK) அணிகள் மோதும், இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இப்போட்டியை பேன்கோடு (FanCode) செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் காணலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் 5, எவின் லூயிஸ் 37, கீசி கார்டி 17 ரன்களில் அவுட்டாகினர். அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 15, ரோஸ்டன் சேஸ் 36, குடாகேஷ் மோட்டி 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
ஷாய் ஹோப் அபார சதம்:
மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து (94 பந்துகளில் 120* ரன்கள்) அசத்தினார். அதிரடியாக விளையாடிய ஜஸ்டின் க்ரீவ்ஸ் 24 பந்துகளில் 43* ரன்களை அடித்து நொறுக்கினார். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ரன்கள் அடித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது தலா 2, முகமது நவாஸ் மற்றும் சைம் அயூப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். WI Vs PAK 3rd ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்):
பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ்.
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):
சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஹசன் அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
(The above story first appeared on LatestLY on Aug 12, 2025 11:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

