ஆகஸ்ட் 12, டார்வின் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி, இன்று (ஆகஸ்ட் 12) டார்வின் நகரில் உள்ள மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்கியது. WI Vs PAK 3rd ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 125* (12 பவுண்டரி, 8 சிக்ஸர்) அடித்தார். டெவால்ட் ப்ரீவிஸ், ஆஸ்திரேலியா பவுலிங்கை வெளுத்து வாங்கினார். ஆஸ்திரேலியா சார்பில் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பென் டுவார்ஷுயிஸ் தலா 2, ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா வெற்றி:
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா 17.4 ஓவர்களில் 165 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிம் டேவிட் 50 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். தென்னாப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக கார்பின் போஷ் மற்றும் க்வேனா மபாகா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய டெவால்ட் ப்ரீவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நடந்த முடிந்த 2 போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமனில் உள்ளது. AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்):
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிகெல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, நகாபயோம்ஸி பீட்டர், க்வேனா மபாகா, லுங்கி என்கிடி.