ஆகஸ்ட் 12, டிரினிடாட் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டின் டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!
வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (West Indies Vs Pakistan):
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் (WI Vs PAK) அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 72 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 64 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இப்போட்டியை பேன்கோடு (FanCode) செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் காணலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்):
பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ். WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):
சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஹசன் அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது.