ZIM Vs SL 1st ODI: இலங்கை அபார பேட்டிங்.. ஜிம்பாப்வே வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு..!

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs SL 1st ODI 1st Batting (Photo Credit: @ZimCricketv X)

ஆகஸ்ட் 29, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 29) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கியது. ZIM Vs SL 1st ODI: ஜிம்பாப்வே - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):

இவ்விரு அணிகள் இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஜிம்பாப்வே அணி 12 போட்டிகளிலும், இலங்கை அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அபாரம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 76 ரன்கள், ஜனித் லியனகே 70* ரன்கள், கமிந்து மெண்டிஸ் 57 ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்கராவா 2, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

பென் குர்ரன், பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவெரே, டோனி முனியோங்கா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு. AFG Vs PAK: யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்; தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாளை மோதல்..!

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement