ZIM Vs NZ 2nd Test, Day 1: 125 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே.. வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து..!
ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆகஸ்ட் 07, புலவாயோ (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, இன்று (ஆகஸ்ட் 07) புலவாயோவில் தொடங்கியது. ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 4 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே தடுமாற்றம்..!
ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):
இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிரையன் பென்னட் 0, நிக் வெல்ச் 11, சீன் வில்லியம்ஸ் 11, கிரேக் எர்வின் 7 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 48.5 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) 44 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியின் தரப்பில் மேட் ஹென்றி (Matt Henry) 5 விக்கெட்கள் மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய சக்கரி ஃபோல்க்ஸ் (Zakary Foulkes) சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):
பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபாட்ஸ்வா சிகா, வின்சென்ட் மசேகேசா, பிளெசிங் முசரபானி, தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு. Cricketer Natarajan: "கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன்" - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அட்வைஸ்.!
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):
வில் யங், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), சக்கரி ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, மேத்யூ ஃபிஷர், ஜேக்கப் டஃபி.