ZIM Vs NZ 2nd Test, Day 1 Lunch Break (Photo Credit: @ZimCricketv X)

ஆகஸ்ட் 07, புலவாயோ (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, இன்று (ஆகஸ்ட் 07) புலவாயோவில் தொடங்கியது. ZIM Vs NZ 2nd Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. நாளை பலப்பரீட்சை..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி ஏற்பட்டது. நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய வீரர்களான பிரையன் பென்னட் 0, நிக் வெல்ச் 11, சீன் வில்லியம்ஸ் 11, கிரேக் எர்வின் 7 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே அணி 28.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) 33* ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில், மேட் ஹென்றி மற்றும் சக்காரி ஃபால்க்ஸ் (Zakary Foulkes) சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபாட்ஸ்வா சிகா, வின்சென்ட் மசேகேசா, பிளெசிங் முசரபானி, தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு. ICC Test Batting Rankings: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை.. ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.., கில், பந்த் சரிவு..!

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

வில் யங், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), சக்காரி ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, மேத்யூ ஃபிஷர், ஜேக்கப் டஃபி.