ஆகஸ்ட் 07, விழுப்புரம் (Villupuram News): விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் மாணவர்கள் மத்தியில் தனது வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். முன்னதாக அவர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து பேசிய நடராஜன், "நான் வளர்ந்து வந்த காலத்தில் எனக்கு தெரிந்த ஒரே விஷயம் இருந்தது கிரிக்கெட் தான்.
கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் :
உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் அதிகம் விளையாடினேன். அந்த பணத்தை வைத்து கல்லூரிக்கு கட்டணம் செலுத்தி வந்தேன். சில நேரத்தில் சரிவர உணவு கிடைக்காமலும், உடையில்லாமலும், கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றுள்ளேன். நாம் கடினமாக உழைத்தால் எப்போதும் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு நானும் ஒரு உதாரணமாக எனது உழைப்பை வழங்கி இருக்கிறேன். நமது உழைப்பு மட்டுமே நமது இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். "120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!
கடினமாக உழைக்க மாணவர்களுக்கு அட்வைஸ் :
எளிமையான, சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் அனைவராலும் சாதிக்க இயலும். நாம் கடினமாக உழைப்பது மட்டுமே நமது வெற்றிக்கு வழிவகை செய்யும். கஷ்டமில்லாமல் எதுவும் எப்போதும் கிடைக்காது. அது கிடைத்தாலும் நீடிக்காது. அதற்கேற்ற தகுதி அந்த கஷ்டத்தை அனுபவிக்கும் போது மட்டுமே வரும். எந்த உயரத்திற்கு நாம் சென்றாலும் தன்னடக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
இலவச கிரிக்கெட் பயிற்சி அளிப்பதாக நெகிழ்ச்சி :
நாம் வாழ்வில் கடந்து வந்த பாதையை எப்போதும் மறந்து விடக்கூடாது. தற்போது என்னால் முடிந்தது எனது ஊரில் மைதானம் அமைத்து கிரிக்கெட் விளையாட துடிக்கும் பலருக்கும் இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறேன். நமது சிறிய வழிகாட்டலும் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்யும் என்ற நம்பிக்கையில் நான் பயிற்சி அளிக்கிறேன்" என கூறினார்.