ஜூலை 15, ஐதராபாத் (Telangana News): தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி குழுவினர் தண்ணீர் தேக்கத்தை அகற்றி வருகின்றனர். இந்த கனமழை காரணமாக (Heavy Rain in Hyderabad) மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. Ways to Style Dungarees: குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை.. அனைவருக்கும் சிறப்பான டங்கரீஸ்.. அத எப்போலாம் போடலாம்? வாங்க பார்க்கலாம்..!
ஐஎம்டி வானிலை மையம் நேற்று வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடெம், கம்மம், சூர்யாபேட், மஹபூபாபாத் ஆகிய மாவட்டங்களில் இரவு 8:30 மணி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில், முஷீராபாத் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணிகளுடன் இருந்த கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது, அங்கிருந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காரை தடுத்து நிறுத்தி, கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
Another car was swept away with passengers on a flooded road in the Musheerabad area, due to heavy rains in #Hyderabad.
Locals stopped the car and rescued the 4 passengers in the car, after breaking the glass.#HyderabadRains #HeavyRains #HeavyRain #Musheerabad #CarSweptAway pic.twitter.com/dnpZJJd3mO
— Surya Reddy (@jsuryareddy) July 14, 2024