ஜூலை 15, நந்தியாலா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், நந்தியாலா மாவட்டத்தில் உள்ள முச்சுமரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் சிறுமி காணாமல் போன வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள், அந்த சிறுமியை பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்து கொன்றதாகவும், அதன் பிறகு முச்சுமரி கால்வாயில் சிறுமியின் உடலை வீசியதாகவும் கூறப்படுகின்றது. Mint Water Benefits: புதினா தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இந்நிலையில், சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி, சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் முச்சுமரி லிப்ட் பாசன கால்வாயில் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சிறுமியின் உடலை கால்வாயில் வீசவில்லை என்று சிறுவர்கள் கூறியதால் ஆற்றில் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த விசாரணை வேறு கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும், அந்த மூன்று சிறார்களும் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். கிராம பொதுமக்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் டிஐஜி விஜய ராவ் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்படும் சிறுவர்களில் ஒருவர் ஆறாம் வகுப்பும், இரண்டு பேர் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று நந்தியாலா மாவட்ட ஆட்சியர் ராஜகுமாரி கூறியுள்ளார்.