Elderman Arrested In POCSO Act: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது..!

விழுப்புரத்தில் 60 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sexual Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X)

மார்ச் 28, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரியபாபுசமுத்திரம் பகுதியில் சேட்டு (வயது 60) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமி அழுதபடி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளார். Woman Stolen Laptops: வங்கிப்பணிக்கு முடக்கு போட்டு, திருட்டுத்தொழிலில் களமிறங்கிய 26 வயது இளம்பெண் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட சேட்டு மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

சேட்டுவை தேடி வந்த நிலையில், நேற்று பெரியபாபுசமுத்திரம் பகுதி அருகே அவர் தப்பிச் செல்ல முயலும்போது காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். சேட்டுவை கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement