Supreme Court Orders to Remove Stray Dogs (Photo Credit : @tamilthehindu X / Wikipedia)

நவம்பர் 07, புதுடெல்லி (New Delhi News): இந்தியா முழுவதும் தெருநாய் தாக்குதல் என்பது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் ஒரு சில நேரம் சாலையில் நடந்து செல்வோரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பலரும் நாய் கடிபட்டு அவதிப்பட்டு உயிர் பிழைத்தாலும், ஒரு சில நேரம் ரேபிஸ் போன்ற வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் நடக்கின்றன. இதனிடையே டெல்லி உச்சநீதிமன்றம் தெருநாய்களை பிடித்து அடைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து பின் ரத்து செய்தது. Shocking Video: மயங்கி கிடந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை.. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!

தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி பாதிப்பு:

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 8 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் நாய் கடியால் (Dog Bite) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாய்களுக்கு நோய் தடுப்பூசி போன்றவற்றை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்:

இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை தீவிரமாகி வருவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இருக்கும் தெரு நாய்களை பிடித்து, பாதுகாப்பான முகாம்களில் வைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தெரு நாய் தாக்குதல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.