Pakistan Bomb Blast (Photo Credit : @rkmtimes X)

நவம்பர் 11, இஸ்லாமாபாத் (World News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து (Red Fort Car Explosion) சிதறியது. இந்த சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. Delhi Blast: மருத்துவர்களின் சதித்திட்டம்.. டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் உறுதி.. இந்தியாவையே அதிரவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.!

குண்டு வெடித்து 12 பேர் மரணம்:

இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்த நிலையில், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல்களுக்கான காரணம் தெரியாததால் அரசு அலுவலகங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாக உயர் மட்ட அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது பழி சுமத்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு:

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை எனவும், ஆப்கான் தாலிபான் மற்றும் இந்தியாவிற்கு தொடர்புடைய பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு வீடியோ: