Shocking Video: ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி... திடுக்கிடும் வீடியோ..!

நாகர்கோவில் அருகே ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது

Shocking Video (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 09, கன்னியாகுமரி (Kanyakumari): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவர் அங்குமிங்குமாக சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் திடீரென அந்த வாலிபர் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் முன் பாய்ந்து உள்ளார். பஸ் முன் வாலிபர் விழுந்ததை பார்த்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், உடனே பஸ்ஸை நிறுத்தினார். எனினும் பஸ் மோதியதில் வாலிபருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விடியோவானது அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த விடியோவானது இணையம் முழுதும் வைரல் ஆகி வருகிறது. மேலும் வாலிபர் ஏன் தற்கொலை செய்ய முயன்றார்? அவர் யார்? என்பதனைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இதனைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Viral Video: சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம்… எச்சரித்த காவல்துறையினர்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement