Viral Video: சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம்… எச்சரித்த காவல்துறையினர்..!
சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம் செய்து வந்த நபரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஜனவரி 09, விருதுநகர் (Virudhunagar): விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகர் பகுதி வைப்பாற்றில் நேற்று மாலை ஒருவர் தத்தளிப்பதை கண்டு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவர் பன்னீர்செல்வம் என்பவரது மகன் ராஜா (வயது 35) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சாத்தூர் நகர் காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!
(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

