Young Boy Threatening Girlfriend: காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது – உல்லாசமாக இருந்த புகைப்படம் காட்டி மிரட்டல்..!

கள்ளக்குறிச்சியில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என வாலிபர் மிரட்டியுள்ளார்.

Sexual Harassment / Rape File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 15, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 26). இவருக்கும், 19 வயது இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ள நிலையில், அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவருடைய செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். மேலும், மீண்டும் அவர் தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கோபமடைந்த பிரவீன் குமார் தனது செல்போனில் எடுத்த புகைப்படத்தை அவளிடம் காட்டி, எனது ஆசைக்கு நீ வரவில்லை எனில் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். பணமும் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை அவரது வாட்ஸ்அப்-க்கு (Whatsapp) பிரவீன் குமார் அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.