Kallakurichi Car Accident (Photo Credit : @ThanthiTV X)

ஜூலை 20, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் சொகுசு கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Chennai News: காதல் தோல்வியால் விபரீதம்.. அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தங்கை தற்கொலை.! 

கார் விபத்தில் 4 பேர் பலி :

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.