
மார்ச் 21, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet) சுங்கச்சாவடி வழியாக, கள்ளக்குறிச்சி நகரை சென்றடையலாம். இந்த பாதையில் சென்னை - திருச்சி வழித்தடத்தில் பயணம் செய்யும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து வர வேண்டிய நிலை இருக்கிறது. இவ்வாறாக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்துகள் நேர்ந்ததால், உள்ளூர் பேருந்து மற்றும் லாரி போன்ற வாகன உரிமையாளர்களிடம், காவல் துறையினர் மாற்று வழியை பயன்படுத்த அறிவுறுத்தினர். இரயில்வே பாலம் வழியாக வாகனத்தை இயக்காமல், உளுந்தூர்பேட்டை நகர பிரிவு மேம்பால பாதையை பயன்படுத்த அறிவுறுத்தி இருந்தனர். அதனை ஏற்று பல வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை இயக்கினாலும், சிலர் பழைய வழியிலேயே ஆபத்தான வகையில் சாலையை கடந்து வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில், இன்று நண்பகல் நேரத்தில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து வந்த தனியார் பேருந்து, இரயில்வே மேம்பாலம் வழியே உளுந்தூர்பேட்டை நகரை சென்றடைய முற்பட்டது. ஆபத்தான வகையில் தேசிய நெடுஞ்சாலையை பயணிகளுடன் கடந்தது. TN Govt Job: அரசுப்பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
பெரும் விபத்து தவிர்ப்பு, 10 பேர் காயம்:
அப்போது, அவ்வழியாக டீசல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி பயணம் செய்தது. திடீரென குறுக்கே புகுந்த தனியார் பேருந்து மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், நல்வாய்ப்பாக பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். எரிபொருள் ஏற்றி வந்த லாரி கடுமையான சேதம் அடையாததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்திக்கொண்டு வந்த பேருந்தின் மீது மோதிய லாரி:
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே, தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்#SunNews | #RoadAccident | #CCTV pic.twitter.com/eqWkXEFzTX
— Sun News (@sunnewstamil) March 21, 2025