ஏப்ரல் 02, சென்னை (Kitchen Tips): உடல் உஷ்ணத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சி தரும் குளிர்பானமாக இளநீர் உள்ளது. இதில், சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பலன்கள் என கலந்து இருக்கும். குழந்தைகள் முதல் அனைவரும் இதனை பருகலாம். குறிப்பாக, கோடை வெயிலுக்கு இதமாக சில்லென்று இளநீர் சர்பத் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். Auto-Lorry Accident: ஆட்டோ – லாரி கோர விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!
தேவையான பொருட்கள்:
இளநீர் - 4
கடல் பாசி - இரு கைபிடி அளவு
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
கண்டன்ஸ்டுமில்க் - 6 கரண்டி
சப்ஜா விதை - 2 கரண்டி
செய்முறை:
சப்ஜா விதைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதோடு கடல் பாசி, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்பு, இதை ஒரு தட்டில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சுமார் ஒரு மணிநேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எடுத்து பார்த்தால் அது ஜல்லி போல இருக்கும். இதை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இதில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை மற்றும் நாம் செய்து வைத்துள்ள இளநீர் ஜல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறியதாக வெட்டி இதோடு சேர்த்துக்கொள்ளவும். பின்னர், இளநீர் சர்பத் தயார், இதனை குளிர்சாதன பெட்டில் சிறுது நேரம் வைத்து குளிர் ஆனவுடன் குளுகுளுவென்று அனைவரும் பருகலாம்.