Maduranthakam Van Accident: திடீரென வெடித்த டயர்.. தறிகெட்டு தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!

சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனம் விபத்திற்குள்ளானதில் சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. வேகமாக சென்றுகொண்டு இருந்த வேனின் டயர் திடீரென வெடித்ததால் நேர்ந்த சோகம் குர்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Causalities Admit on Chengalpattu Govt Hospital (Visuals from Spot)

ஜனவரி 27, வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி (Vandavasi, Tiruvannamalai), படூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணிக்கு, சென்னையில் உள்ள வேளச்சேரியில் (Velachery, Chennai) இருக்கும் தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் (Wedding) நடைபெற்றுள்ளது. நேற்று இரவில் வரவேற்பு (Wedding Reception) நிகழ்ச்சியும் நடைபெற்ற நிலையில், படூர் கிராமத்தை சேர்ந்த 25 பேர் வேனில் வேளச்சேரி நோக்கி பயணம் செய்தனர்.

வந்தவாசியை சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் என்பவர் வேனை இயக்கியுள்ளார். இவர்களின் வாகனம் மதுராந்தகம் (Maduranthakam) கருங்குழி பகுதியில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Trichy Chennai National Highway) வந்துள்ளது. அப்போது, வேனின் பின்பக்க டயர் வெடித்து சிதறியுள்ளது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்துடன் தாறுமாறாக வேன் பயணித்துள்ளது. Dancer Ramesh Suicide: ஜீ தொலைக்காட்சி நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை.. பிறந்தநாளில் விபரீத முடிவெடுத்த பரிதாபம்.. கண்ணீரில் ரசிகர்கள்.!

இறுதியில் நிலைதடுமாறி வேன் சாலைத்தடுப்பில் மோதி தலைகுப்பற (Van Tire Explodes & Hit Center Median made Accident) கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சபிதா (வயது 12) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியாகினர். சிறுவர்கள் கோகுல் (வயது 14), அஜித் (வயது 17) உட்பட 20 பேர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல் துறையினர் (Maduranthakam Police), காயமடைந்தோரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு (Chengalpattu Government Hospital) சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோகுல், அஜித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 27, 2023 09:11 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement