Bike Taxi Driver Assaulted 50 Girls: 50 பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் போக்ஸோவில் கைது: சென்னையில் பகீர்..! டார்கெட் இவர்கள்தான்.. அதிர்ச்சி விபரம் இதோ.!
Accuse Yogeswaran (Photo Credit: @Sriramrpckanna1 X)

நவம்பர் 20, சென்னை (Chennai Crime News): சென்னையில் உள்ள டி.பி சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி, காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புகார் ஒன்றை வழங்கினார். அப்புகாரில், "எனக்கு 13 வயது மகள் இருக்கிறார். அவர் கடந்த 17ம் தேதி இரவு நேரத்தில், டியூசன் சென்றுவிட்டு தனியே வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வாலிபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல் ஆய்வாளர் சக்தி வேலாயுதம் தலைமையிலான அதிகாரிகள், சம்பவம் நடந்த தெருவில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது, சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், பாலியல் தொல்லை கொடுத்து சில்மிஷம் செய்த அதிர்ச்சி காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வாகனத்தின் எண் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகவில்லை. இதனால் அப்பகுதியை சுற்றிலும் இருக்கும் 200 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. Smoking Dangerous: புகைப்பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?.. அதிர்ச்சியை தரும் விபரம் இதோ.! 

இறுதியாக வாகனத்தின் பதிவெண் கண்டறியப்படவே, அதனை வைத்து டி.பி சத்திரம் புஜ்ஜி தெருவில் வசித்து வரும் யோகேஸ்வரன் என்ற 24 வயது இளைஞரின் வீட்டிற்கு சென்றனர். முதற்கட்ட அணுகுமுறையிலேயே யோகேஸ்வரனின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிடவே, உடனடியாக அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு நடந்த விசாரணையில், சிறுமி மட்டுமல்லாது 50-க்கும் அதிகமான பெண்கள் யோகேஸ்வரன் செயலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

யோகேஸ்வரனிடம் நடந்த தீவிர விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு.,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே யோகேஸ்வரனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது வரை குழந்தை இல்லை. முன்னதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பணியாற்றி வந்த நிலையில், யோகேஸ்வரனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், பணியில் இருந்து நீக்கி இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாகவே பைக் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இரவு நேரத்தில் சாலையும் வெறிச்சோடி கிடைக்கும், போனஸ் தொகையும் அதிகம் கிடைக்கும் என்பதால், இரவு நேர வேலையை விரும்பி தேர்வு செய்துள்ளார். அச்சமயம், இரவுநேர பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும் இளம்பெண்கள், பைக் டாக்சியை முன்பதிவு செய்து பயணிக்கும்போது, அவர்களைத் தொட்டு சில்மிஷமும் செய்துள்ளார். சிலர் அவரை கண்டிக்கும்போது, காலில் விழுந்து கதறி அங்கிருந்து தப்பி செல்வார். Virat & Mitchell Marsh: உலகக்கோப்பையை மதிக்காத மிட்செல்., தலைவணங்கி பதக்கத்தை பெற்ற விராட்.. விபரம் இதோ.! 

சில்மிஷ செயலை கண்டுகொள்ளாது செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களில் சிலருக்கு மெசேஜ் செய்து பேசி வந்துள்ளார். பின், பிரச்சனை இல்லாத பெண்களுடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். இது காலப்போக்கில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்து முத்தம் கொடுப்பது உட்பட பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் சென்றுள்ளது.

எச்சரிக்கும் பெண்களை தன்னை பெரிய பின்னணி கொண்ட ஆட்களைப்போல பாவித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் பெண்களும் புகார் அளிக்க தயங்கி இருக்கின்றனர். பெண்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிய யோகேஸ்வரன், மொத்தமாக தற்போது வரை இரவு மற்றும் அதிகாலை வேளையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார். Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..! 

சமீபத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து, அவரின் தாயாரிடம் சிறுமி தகவலை பகிர்ந்ததன் விளைவாக, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் யோகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. யோகேஸ்வரனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும்போது, அவர்களின் ஸ்மார்ட்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களின் தகவலை பதிவு செய்து வைத்துக்கொண்டால் ஆபத்து காலங்களில் செல்போனை வேகமாக அசைத்தாலே காவலன் செயலி செயல்பட தொடங்கிவிடும். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று, ஸ்மார்ட்போனின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, 2 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்குள் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்துவிடுவார்கள் என காவல் துறையினர் அறிவுரை வழங்குகின்றனர்.