Smoking Dangerous: புகைப்பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?.. அதிர்ச்சியை தரும் விபரம் இதோ.!
Cigarette Smoking Kills (Photo Credit: Pixabay)

நவம்பர் 20, சென்னை (Health Tips): சர்வதேச அளவில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 8 மில்லியன் மக்கள் தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். இவர்களில் 1.2 மில்லியன் மக்கள் புகைப்பழக்கம் அறவே இல்லாதவர்கள். இவர்கள் புகைபிடிப்போர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் மரணமடைகின்றனர். உலகளவில் அமெரிக்காவில் ஆண்டுக்கு குறைந்தது 5 இலட்சம்பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகிறார்கள். சீனாவில் புகைப்பழக்கத்தால் ஆண்களின் ஆயுட்காலம் என்பது வெகுவாக குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது சராசரியான ஆயுளைக்காட்டிலும், புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் 13 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தை அடைகின்றனர். புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய், இதயநோய் காரணமாக மரணங்கள் நிகழுகின்றன. அதுமட்டுமல்லாது மலட்டுத்தன்மை, உடல்குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கர்ப்பகால கருவுக்கு பிரச்சனை என பல்வகை நோய்களை சந்திக்கின்றனர். புகைப்பதால் பற்களில் ஏற்படத்தொடங்கும் இழப்பு, பற்களின் எலும்புகளையும் பாதிக்கிறது. Virat & Mitchell Marsh: உலகக்கோப்பையை மதிக்காத மிட்செல்., தலைவணங்கி பதக்கத்தை பெற்ற விராட்.. விபரம் இதோ.! 

புகைப்பிடித்தலை தடுக்க இளம் தலைமுறைக்கு, அவர்களின் இளவயதில் இருந்து அதனால் ஏற்படும் தாக்கங்களை வெளிப்படையாக அறிவுறுத்தி வளர்க்க வேண்டும். இது அவர்களை புகையில் இருந்து விலக்க உதவி செய்யும். தினமும் ஒரு சிகிரெட் பழக்கம், கட்டாயம் நமது ஆயுளை 15 ஆண்டுகள் குறைக்கவல்லவை. இவை ஒருநாள் என தொடங்கி நடைபெறும் பட்சத்தில், நாம் விரும்பாத நேரத்தில் வாயில் வந்து ஒட்டிக்கொள்ளும் புகை, நாம் வாழ்க்கையை தொடங்க ஆசைப்படும் காலத்தில் புற்றுநோயாக வளர்ந்து நிற்கும்.

நிகோடின் ரசாயனம் புகைப்பவர்களை, அதற்கு அடிமையாக்குகிறது என்பதால், அதனை ஒவ்வொருமுறை விரும்பி வாங்கி குடிப்போர் இறுதியில் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும். வாய், உதடு, தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், சிறுநீரகம், கல்லீரல், கணையம் மற்றும் வயிறு என ஒவ்வொரு உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் நேரடியாக பாதிக்கப்படும். இது எதிர்காலத்தில் பக்கவாதம், இரத்தக்குழாய் அடைப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தவல்லவை. Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..! 

நாம் சாப்பிடும் உணவை, அதன் சுவையை உணரவைக்கும் நரம்புகள் செயலிழந்து, நாளடைவில் உணவின் மீது வெறுப்பு ஏற்படும். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்போர், அதனை மறக்க உலர்திராட்சை, பாதாம், பிஸ்தா போன்ற பொருட்களை சாப்பிடலாம். ஏலாக்காய் அல்லது கிராம்பை வாயில் ஒதுக்கி சிறிது நேரம் கழித்து துப்பிவிடலாம். எந்த ஒரு பழக்கத்தை பழகுவது எளிது எனினும், அதனை விடுவது கடினம். அது புகைப்பழக்கத்திற்கும் பொருந்தும். இவ்விவகாரத்தில் மனக்கட்டுப்பாடு மிகமுக்கியம்.