Erode Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்: 3 பேர் பரிதாப பலி.!

தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியாகினர், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Accident (File Pic)

நவம்பர் 13, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தில், இன்று கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பங்களாபுதூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர், தீபாவளி கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீனும் வரும்போது, விபத்து ஏற்பட்டுள்ளது. PM Modi Rally: பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில், மின்விளக்கு கோபுரம் மீது திடீரென ஏறிய இளம்பெண்; பதறிப்போன மோடி.!

சின்னமனூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் யார்? அவர்களின் ஊர் எது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement