
நவம்பர் 12, செகந்தராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாரதிய ராஷ்ட்ர சமிதி, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகள் அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நவம்பர் 30ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்று, டிசம்பர் மாதம் 03ம் தேதி அன்று வெளியாகிறது.
தெலுங்கு தேசத்தில் காலூன்ற பாஜகவும் அங்கு பம்பரமாக சுழன்று வருகிறது. இந்நிலையில், நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரில், பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். Pakistan Earthquake: பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.!
அப்போது, இளம்பெண் ஒருவர் பிரதமரிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கோபுரம் மீது ஏறினார். இதனைக்கண்ட மோடி, பெண்மணியை இறங்கிவர அறிவுறுத்தினார்.
தான் உங்களுக்காக, உங்களிடம் பேசவே இங்கு வந்துள்ளேன். எதுவாக இருந்தாலும் பேசலாம். உலகில் தீர்க்க இயலாதது எதுவும் இல்லை. கீழே இறங்கிவாருங்கள் என் மகளே என மோடி இளம்பெண்ணிடம் கோரிக்கை வைத்து, கீழே வரச்செய்தார்.
#WATCH | Secunderabad, Telangana: During PM Modi's speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
— ANI (@ANI) November 11, 2023