Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 05, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையாக பாதித்துள்ளது. இது இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில் ரூ.74 ஆயிரத்தை தாண்டியும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Virudhunagar News: காதல் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. கொன்று கிணற்றில் வீசிய மகன்.!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், மே 05ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று (மே 05) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,775க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையில் மாற்றமில்லாமல், வெள்ளி ஒரு கிராம் ரூ.108க்கும், வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கு விற்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on May 05, 2025 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).