Gold Silver Price: ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

தங்கத்தின் விலை கடந்த ஓராண்டாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி சவரன் ரூ.62,000ஐ தாண்டியது. இன்று 63 ஆயிரத்தை கடந்துள்ளது.

Gold Silver Price: ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 05, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்.!

சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):

கடந்த வாரத்தில் ரூ.62 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், தற்போது ரூ.63 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்ததுபோல தோன்றினாலும், இன்று இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 95 ரூபாய் உயர்ந்து 7905 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Feb 05, 2025 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).