பிப்ரவரி 05, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு (Erode East Constituency) சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan) உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, டெல்லி மாநில சட்டப்பேரவை (Delhi Assembly Election 2025) தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். Vaiko: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
இந்த நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்தல் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.