Gold Silver Price: ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; தொடர் உச்சத்தால் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

தங்க நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Gold Silver Price: ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; தொடர் உச்சத்தால் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 21, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இது இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த சில வாரங்கள் வரை ரூ.65 ஆயிரத்தில் இருந்து மெல்ல உயரத்தொடங்கிய தங்கம் இன்று ரூ.72 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Summer Tips: சுட்டெரிக்கும் வெயில்.. சூடேறும் மீட்டர்.. மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்? 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.72,150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,10,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ. 560 மற்றும் கிராமுக்கு ரூ.70 என்ற அளவில் இன்று உயர்ந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).