Gold Rate Today: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. ஆப்பு வைத்த தங்கம் விலை.. மீண்டும் உச்சக்கட்டம்.!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 02, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.75,000ஐ கடந்து இருந்தது. Thoothukudi Double Murder: கஞ்சா கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன்-தம்பி கொன்று புதைப்பு.. தூத்துக்குடியில் இரட்டைக்கொலை.!
நாளுக்குநாள் உயரும் தங்கம், வெள்ளி விலை:
தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி ஜூலை மாதத்தில் தொடக்கத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 02ஆம் தேதியான இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. Nalam Kakkum Stalin Scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்.!
இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இன்று (ஆகஸ்ட் 2) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,290 க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் வெள்ளி விலை இன்று மாற்றம் இன்றி ரூ.1,23,000 க்கு விற்பனையாகிறது. சமீபகாலமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 585 புள்ளிகள் சரிந்து 80,599 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 203புள்ளிகள் சரிந்து 24,465 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 02, 2025 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

