ஆகஸ்ட் 01, தலைமை செயலகம் (Chennai News): ஏழை எளிய மக்களின் உடல் நலக் கோளாறுகளை கண்டறிந்து, அதுகுறித்த விழிப்புணர்வுகளை பாமர மக்களுக்கும் ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை (ஆகஸ்ட் 2) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் (Nalam Kakkum Stalin Scheme Launch Day) தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத நபர்களுக்கும் முழு அளவிலான உடல்நல பரிசோதனை செய்து, அவர்களுக்கான மருத்துவ தேவையை உறுதி செய்துக்கொள்ளலாம். Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - ராதாகிருஷ்ணன் விளக்கம்:
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 1,256 பகுதிகளில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கான முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, இன்று தலைமை செயலகத்தில் இருந்தவாறு விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு முகாம்கள் கண்காணிக்கப்படும் எனவும், 5 வகையான மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்களும் முகாமில் இடம்பெற்று இருப்பார்கள் எனவும் கூறினார். மேலும், தூய்மை பணியாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ள மூன்று லட்சம் பணியாளர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படும். கட்டுமான தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.