ஆகஸ்ட் 01, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகர். பன்கரைப் பகுதியில் வசித்து வருபவர்கள் மாரிப்பாண்டி, அருள்ராஜ். இருவதும் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களில் மாரிப்பாண்டி சமீபத்தில் நடந்த விபத்தில் பார்வையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் இவர்கள் தனது அக்கா மாரியம்மாள் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கும்பல் ஒன்று கஞ்சா போதையில் தெருவில் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அருள்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் சகோதரர்கள் இருவரும் மாயமாகி இருக்கின்றனர். Ungaludan Stalin: 'உங்களுடன் ஸ்டாலின்' - அரசியல் தலைவர்கள் பெயர் அரசுத்திட்டத்தில் எதற்கு? - நீதிபதிகள் உத்தரவு.!
சகோதரர்கள் மாயம்:
இதனால் அவர்களை உள்ளூரில் தேடி வந்த உறவினர்கள், பெருமாள் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மாயமான இருவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக சதீஷ், முனீஸ்வரன், விஸ்வரஜ், காதர் மீரான் ஆகியோரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்திச் சென்று கொலை:
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொன்று பிதைக்கப்பட்ட மாரிப்பாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோரின் உடலை மீட்டுள்ளனர். வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முன்னிலையில் உடல் பரிசோதனையும் நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவில் நடந்த தகராறு தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த போதை கும்பல் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்துள்ளது தெரியவந்தது. தொடர் விசாரணை நடந்து வருகிறது.