Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58,400 க்கு விற்பனை.!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ரூ.55 ஆயிரத்திற்கு குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது.

Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58,400 க்கு விற்பனை.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

அக்டோபர் 21, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Two-Wheeler Rider Dies: 21 வயது இளைஞருக்கு எமனாக மாறிய மின்கம்பம்; ரீல்ஸ் வீடியோ, அதிபயங்கர வேகத்தால் சோகம்..! 

கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்வு:

தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று (Gold Rate in Chennai) ரூ.58 ஆயிரத்தை கடந்தது:

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.58,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.7,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).