Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,040/- க்கு விற்பனை.!

நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, இன்று ரூ.57 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,040/- க்கு விற்பனை.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 03, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Tiruvannamalai Landslides: தி.மலை நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், தம்பதி உட்பட 7 பேர் மரணம்.. குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..! 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:

தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை (Gold Rate in Chennai):

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று கிராமுக்கு ரூ.7,090 க்கும், சவரனுக்கு ரூ.56,260 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கம் ரூ.57,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து, கிராம் தங்கம் இன்று ரூ.7130 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளயின் விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).