Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.. சவரன் ரூ.57,000 க்கு விற்பனை.!

கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1000 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.. சவரன் ரூ.57,000 க்கு விற்பனை.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Samiyarpettai Beach: போதை கும்பல் சரமாரி தாக்குதல்; குடும்பத்துடன் சென்ற பெண்களை இழிவாக பேசி அதிர்ச்சி செயல்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ.99,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.57,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,125 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, இன்று கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).