டிசம்பர் 26, குறிஞ்சிப்பாடி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி (Kurinjipadi), மீனாட்சிபேட்டை கிராமத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், சம்பவத்தன்று சாமியார்பேட்டை (Samiyarpettai Beach) கடற்கரை பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். 4 ஆண்கள், 2 பெண்கள், கைக்குழந்தை என கடற்கரை அழகை ரசிக்க குடும்பமாக இவர்கள் சென்றுள்ளனர். அச்சமயம், அங்கு கடலில் குளித்துக்கொண்டு இருந்த சில நபர்கள், பெண்களை பார்த்து கேலிப்பேச்சு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும், ஆண்களிடம் 2 பெண்களை இங்கு விட்டுச் செல்லுங்கள் என அவதூறாக பேச ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொள்ள, இருதரப்பு வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!
கடற்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
பெண்களை அவதூறாக பேசி பிரச்சனை செய்த கும்பல், தங்களின் நண்பர்கள் என 20 பேருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக வந்து குடும்பத்துடன் வந்திருந்த நபர்களை தாக்கி இருக்கின்றனர். போதையில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தால், கடற்கரை அழகை ரசிக்கச் சென்ற குடும்பத்தினர் கலங்கிப்போயினர். பின் இந்த விஷயம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, பலரும் போதை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் லேசான பரபரப்பு சூழலை உண்டாக்கி இருக்கிறது.
மோதல் சம்பவம் குறித்த அதிர்ச்சி காணொளி:
#வன்மையாக கண்டிக்கிறோம்!!!
குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சாமியார் பேட்டை கடற்கரையை சுற்றி பார்க்க வந்தபோது அங்கு வந்த தியாகவல்லி தலித் சமுதாயத்தை சார்ந்த பத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் அந்த பெண்களிடம் அத்துமீறி சண்டை போடும் காட்சி.. pic.twitter.com/LvJlkKyFk4
— விருதை உதயா (@vkUdhayaVjm) December 25, 2024
போதை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் கோரிக்கை:
கடலில் குளிக்க சென்ற குடும்பம் கொடூரமாக தாக்கிய கும்பல்!திருநங்கை காலில் விழுந்து தப்பித்த பெண்கள்!#thanthitv #kadalur #sea pic.twitter.com/EXSt3Uf0Ba
— Thanthi TV (@ThanthiTV) December 25, 2024