Chennai Shocker: 22 வயது பெண் ஆசிரியரை உடலெல்லாம் கடித்து வைத்த தலைமை ஆசிரியை.. தனிமை பழக்கம் போதையில் தறிகெட்ட சோகம்.!
அரையாண்டு தேர்வுக்கு விவாதிக்கலாம் வா என தலைமை ஆசிரியை பெண் ஆசிரியர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து, தனிமையில் நெருங்கி உடலெல்லாம் கடித்து வைத்த கொடுமை சென்னையில் நடந்துள்ளது.
அக்டோபர் 30, ஈஞ்சம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை (School Teacher Same Sex Relationship) ஆசிரியையாக 22 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக உடனடியாக அரசு மருத்துவமனை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வா என அழைப்பு:
இதன்பேரில் ஆசிரியை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவரிடம் காயத்திற்கான காரணம் என கூறிய தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதாவது, தனியார் பள்ளி ஆசிரியைக்கு சம்பவத்தன்று தொடர்பு கொண்ட பள்ளியின் பெண் தலைமை ஆசிரியை சங்கீதா, அரையாண்டு தேர்வு குறித்து விவாதிக்க வீட்டிற்கு அழைத்துள்ளார். Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!
குளிர்பானத்தில் மயக்க மருந்து, உடலெல்லாம் காயம்:
வீட்டில் குடிக்க ஆசிரியைக்கு குளிர்பானம் வழங்கப்பட்ட நிலையில், அதனை குடித்து மயங்கிய ஆசிரியை எழுந்து பார்த்தபோது உடலெல்லாம் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அங்கிருந்து தப்பிக்க முற்பட்டபோது, தலைமை ஆசிரியை வீட்டிற்குள் வைத்து பெண் ஆசிரியரை பூட்டி வைத்துள்ளார். பின் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், 22 வயது பெண் ஆசிரியை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
2 ஆண்டுகளாக தனிமை சந்திப்பு:
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், தலைமை ஆசிரியை சங்கீதாவின் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியை - தலைமை ஆசிரியை கடந்த 2 ஆண்டுகளாக தனிமையில் சந்தித்து வந்தது தெரியவந்தது. அதன்படி, சம்பவத்தன்று இவர்கள் இருவாயூரம் மதுபானம் அருந்திவிட்டு தனிமையில் இருந்துள்ளனர். Road Accident: இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. முதியவர் உட்பட 2 பேர் பலி..!
போதையில் உடலெல்லாம் கடித்து கொடுமை:
அப்போது, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், தலைமை ஆசிரியை பெண் ஆசிரியரை உடையில் பல இடங்களில் கடுமையாக கடித்து இருக்கிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, தலைமை ஆசிரியை சங்கீதாவை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர். சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
(The above story first appeared on LatestLY on Oct 30, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

