Dead Body (Photo Credit: Pixabay)

அக்டோபர் 29, தஞ்சாவூர் (Thanjavur News): புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 60). இவரும், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து வல்லம் (Velankanni To Vallam) சென்ற அரசு விரைவு பேருந்து, இவர்கள் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது (Accident) மோதியுள்ளது. வானிலை: தீபாவளிக்கு மழை வருமா? நாளைய வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.