A Teenager Was Stabbed To Death: பிழைக்கச்சென்ற இடத்தில் கள்ளக்காதல்.. 35 வயது இளைஞரை போட்டுத்தள்ளிய லாரி ஓட்டுநர்.. கண்டித்தும் கேட்காததால் இரத்தம் தெறிக்க சம்பவம்.!

ஊர்விட்டு ஊர்சென்று வேலை பார்த்து வந்த இளைஞர், உள்ளூரை சேர்ந்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்து வந்துள்ளார். இறுதியில் பெண்ணின் கணவருக்கு விபரம் தெரியவந்து, அவர் கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

A Teenager Was Stabbed To Death: பிழைக்கச்சென்ற இடத்தில் கள்ளக்காதல்.. 35 வயது இளைஞரை போட்டுத்தள்ளிய லாரி ஓட்டுநர்.. கண்டித்தும் கேட்காததால் இரத்தம் தெறிக்க சம்பவம்.!
Crime Murder (Photo Credit: Pixabay)

மார்ச் 11, கோவை (Coimbatore News): மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் பாண்டியன். இவரின் மகன் ஜெய்கணேஷ் (வயது 35), கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர், சுப்பிரமணியபுரம் பகுதியில் தங்கியிருந்து கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜெய்கணேஷ் நேற்று காலை 6 மணியளவில், அங்குள்ள கே.என்.ஜி புதூர் பிரிவில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு இருசக்கர வாகனத்தில் வருகைதந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்த கத்தியால் ஜெய் கணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். New Zealand ICC Points: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்..!

கள்ளத்தொடர்பினால் நேர்ந்த சோகம்: இந்த சம்பவத்தில் ஜெய்கணேஷ் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் துறையினர், ஜெய் கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சாமிநாதனின் (வயது 35) மனைவிக்கும், ஜெய்கணேஷுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இந்த விஷயம் லாரி ஓட்டுநரான சாமிநாதனுக்கு தெரியவந்து, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார். கள்ளக்காதலில் உறுதிபட இருந்தவர்கள், அதனை கைவிடுவதாக தெரியவில்லை. கண்டித்ததற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், தனது திட்டப்படி சம்பவத்தன்று கத்தியை எடுத்துச்சென்று ஜெய்கணேசை வழிமறித்து கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது உறுதியானது. கொலை வழக்கில் தொடர்புடைய சாமிநாதனை துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் சம்பவத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).