
பிப்ரவரி 06, பர்கூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி ({Pochampalli), பர்கூர் (Bargur) பகுதியில் உள்ள கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 65 மாணவர்கள், 70 மாணவிகள் என 130 க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இதே அரசுப்பள்ளியில், 13 வயதுடைய சிறுமி, எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமி கடந்த ஒரு மாதமாகவே பள்ளிக்கு வருகை தரவில்லை.
13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு (Abortion):
இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று, குழந்தையை படிக்க பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்து, எதனால் பள்ளிக்கு மாணவி வரவில்லை என விசாரித்துள்ளார். அப்போது, மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதாவது, சிறுமி கர்ப்பமாகிவிட்டதாகவும், கருக்கலைப்பு செய்த காரணத்தால் பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை எனவும் கூறி இருக்கின்றனர். Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு: இன்றைய தங்கம், வெள்ளியின் விலை இதோ.!
ஆசிரியர்களின் கூட்டுப்பாலியல் பலாத்காரம் (Teachers Gang Raped Minor Girl):
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தலைமை ஆசிரியை, மாணவியிடம் விசாரித்தபோது 3 ஆசிரியர்களின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. இதே பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் சின்னசாமி (வயது 57), ஆறுமுகம் (வயது 48), பிரகாஷ் (வயது 37) ஆகியோரின் மீது சிறுமி பலாத்கார குற்றச்சாட்டை முன்வைத்தார். பின் தலைமை ஆசிரியை இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் சுமதியிடம் தகவல் தெரிவிக்க, இதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் வரை தகவல் சென்றது.
காவல்துறை விசாரணை:
பின் அவர்களின் அறிவுரைப்படி குழந்தைகள் நலபாதுகாப்பு மையம், பள்ளிக்கல்வித்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அதிகாரிகள் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். இன்றைய வானிலை: தமிழக மக்களே உஷார்.. சுட்டெரிக்கப்போகும் வெயில்., உயரும் வெப்பநிலை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
நீதிமன்றம் உத்தரவு:
இவர்கள் மூவரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் சிறுமி கர்ப்பமானது உறுதியானது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மருத்துவபரிசோதனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்த உறவினர்கள், பர்கூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து அமைதிப்பேச்சுவார்தை நடத்தி, உரிய நடவடிக்கை அளிப்பதாக வாக்குறுதி அளித்ததன்பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கைதான நபர்களை வரும் பிப். 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.