Indian IMD Logo | Heatwave (Photo Credit: @airnewsalerts X / Pixabay).jpg

பிப்ரவரி 06, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) இன்று நடைபெறும் மாற்றத்தைப்பொறுத்தவரையில், 06-02-2025 இன்றைய வானிலை (Today Weather) தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌.

நாளைய வானிலை (Tomorrow Weather):

07-02-2025 நாளை தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. 08-02-2025 முதல்‌ 11-02-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. Professor Married Student: கல்லூரி வளாகத்தில் நடந்த டும்.. டும்..! மாணவரை மணந்த பேராசிரியை..!

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):

இன்று (06-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.