Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.62,000-ஐ கடந்து சென்று விட்டது. இன்றைய வானிலை: தமிழக மக்களே உஷார்.. சுட்டெரிக்கப்போகும் வெயில்., உயரும் வெப்பநிலை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 

சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):

கடந்த வாரத்தில் ரூ.63 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், தற்போது ரூ.64 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.63,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, இன்று கிராம் தங்கத்தின் விதை ரூ.7,930 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,07,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.