செப்டம்பர் 16, மேலூர் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கந்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். ராஜா அப்பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பேக்கரியை விரிவுபடுத்த கடன் வாங்கியதாக தெரியவருகிறது. அவ்வாறாக, அலங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் வினோத் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
கடனை கேட்டு ஆபாச பேச்சு:
இந்த பணத்தை திரும்ப செலுத்தாமல் ராஜா காலந்தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வினோத் மற்றும் அவரின் நண்பர் சிவா ஆகியோர் ராஜாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு ராஜாவிடம் பணம் கேட்டு தகராறு செய்து, அவரை ஆபாசமாக திட்டி இருக்கின்றனர். இதனை அவரின் 2 மகள்களும் பார்த்ததால், மகள்களின் முன்பு கடன் கொடுத்தவர் இப்படி பேசிவிட்டார் என ராஜா வருத்தத்தில் இருந்துள்ளார். TN Weather Update: 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கப்போகும் வெயில்; தமிழ்நாட்டின் நாளைய வானிலை நிலவரம்.! விபரம் உள்ளே.!
ராஜாவின் விபரீத எண்ணம்:
இதேபோல, கடன் கொடுத்தவர்கள் அடுத்தடுத்து தொடர்பு கொண்டு கடனை கேட்டு கடிந்துகொண்டதாக தெரியவருகிறது. இதனால் கடனை அடைக்க பேக்கரியை அடமானம் வைத்து பணம் பெற்றும், அது போதவில்லை என தெரியவருகிறது. இதனிடையே, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற விபரீத எண்ணம் ராஜாவுக்கு வந்து, அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை கடிதம்:
இந்த விசயத்திற்கு குழந்தைகள் மறுப்பு தெரிவிக்கவே, கணவன் - மனைவியாக விஷம் குடித்து விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே கடிதம் எழுதி வைத்த தம்பதி, விஷம் குடித்து தற்கொலை முயற்சித்தியில் ஈடுபட்டது. தற்கொலை கடிதத்தில், "தங்களை கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதால் இவ்வாறான துயரமான முடிவை எடுத்ததாகவும்" தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை:
கடந்த 11ம் தேதி தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள், மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்-பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மேலூர் காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின் சம்பவம் தொடர்பாக புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். Thirumavalavan: தமிழக அரசியலில் புயலை கிளப்பிய திருமாவளவன்.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி.. அதிரடி பேட்டி.. முழு விபரம் இதோ.!
ராஜா உயிரிழப்பு & மனைவிக்கு சிகிச்சை:
3 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ராஜா, கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மனைவி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜாவின் மகள்கள் மட்டும் தனியே தவித்து வந்த நிலையில், தகவல் அறிந்த உறவினர்கள் பலரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். தங்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். இதனால் பரபரப்பை கட்டுக்குள் கொண்டு வர, பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலூர் காவல் துறையினர் சிவா மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் மீது கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.